Kaalaiyil Thuthippaen in B♭ Scale

B♭ = A♯

காலையில் துதிப்பேன்
கருத்துடன் துதிப்பேன்
காலை தேடுவோர் கண்டடைவார் என்ற
கர்த்தரையே துதிப்பேன்
போன ராவிலே காத்தீர்
புது காலையை காணச்செய்தீர்
தேவனே என் உள்ளத்தில் தானேயிருந்து
இந்நாளை கடக்கச் செய்தீர்
…காலையில்
இந்த வனாந்தரத்தில் எனக்கெந்
இடர் வந்தாலும்-இயேசுவே
உம்மில் சார்ந்திருக்கும் எந்தன்
ஜெயம் ஜெயம் நீர் தானே
…காலையில்
ஆதி அன்பை இழந்தே
ஜனம் வாடி தவித்திடுதே
ஆதி சபை அதிகாலையில் கூறி
பாடி புகழ்ந்திடுவேன்
…காலையில்
கறை திரை யாவும் நீக்கி
சுத்த கற்புள்ள கன்னிகையாய்
வானில் வரும் மணவாளனை சந்திக்க
வாஞ்சை பெருகுதையா
…காலையில்
இயேசுவே நீர் வந்தாலும்
என்னை மரணம் சந்தித்தாலும்
ஆயத்தமாய் உந்தன் சேவை செய்து
அல்லேலூயா எதிர் நோக்குவேன்
…காலையில்


Kaalaiyil Thuthippaen Chords for Keyboard, Guitar and Piano

Kaalaiyil Thuthippaen Chords in B♭ Scale

தமிழ்