போதும் நீங்க போதும்
உம் சமூகம் உம் பிரசன்னம்-2
எப்போதும் நீர்தானையா
என்முன்னே நீர்தானையா-2
இயேசையா என் மீட்பரே-2
இயேசையா என் மீட்பரே
உம் விருப்பம் செய்வதுதான்
என் வாழ்வின் ஏக்கமையா-2
இதுதானே என் உணவு
இதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2)
—இயேசையா என்
என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்
ஏங்கி தினம் தவிக்கின்றது-2
ஜீவனுள்ள என் தேவனே
என் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2
–இயேசையா என்
உம் சமூகம் வாழ்கின்ற நான்
உண்மையிலே பாக்கியவான்-2
எப்போதும் உம்மைத் துதிப்பேன்
எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2
—இயேசையா என்
இவ்வுலக வாழ்வைவிட
உம் சமூகம் மேலானது-2
பெலத்தின் மேலே பெலனடைவேன்
வருகையிலே உம்மைக் காண்பேன்-2
—இயேசையா என்
அழுகையெல்லாம் ஆனந்த
நீரூற்றாக மாற்றுகிறீர்
குளங்களெல்லாம் நிரம்புதையா
உம் வல்லமை மழையாலே-2
—இயேசையா என்
Pothum Neenga Pothum Chords for Keyboard, Guitar and Piano