ஊற்றுங்கையா ஊற்றுங்கையா
பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா
எங்க வாழ்க்கைய
உம்மைப்போல் மழை உண்டாக்க
தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே
மழையை பொழியுமோ
நீரல்லவோ
…ஊற்றுங்கையா
வயல்களும் ஆறுகளும்
வற்றி போய் இருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால்
வனாந்தரம் செழிக்கும்
நீரல்லவோ
…ஊற்றுங்கையா
ராஜாவின் முக களையில்
வீரம் இருக்கும்
உங்க தயவுக்குள்ள
பின் மாரி இருக்கும்
நீரல்லவோ
…ஊற்றுங்கையா
Oottungaiyaa Chords for Keyboard, Guitar and Piano