சங்கீதம் 59

fullscreen1 என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.

fullscreen2 அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.

fullscreen3 இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்.

fullscreen4 என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள், எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.

fullscreen5 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா.)

fullscreen6 அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.

fullscreen7 இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.

fullscreen8 ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.

fullscreen9 அவன் வல்லமையை நான் கண்டு உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.

fullscreen10 என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.

fullscreen11 அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.

fullscreen12 அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.

fullscreen13 தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவரென்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.)

fullscreen14 அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.

fullscreen15 அவர்கள் உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.

fullscreen16 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

fullscreen17 என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் அபியாசாப்; இவனுடைய மகன் ஆசீர்.

Tamil Easy Reading Version
ஆசீரின் மகன் எல்க்கானா, எல்க்கானாவின் மகன் அபியாசாப், அபியாசாப்பின் மகன் ஆசிர்.

Thiru Viviliam
அவர் மகன் எல்கானா; அவர் மகன் எபியசாபு; அவர் மகன் அசீர்;

1 நாளாகமம் 6:221 நாளாகமம் 61 நாளாகமம் 6:24

King James Version (KJV)
Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,

American Standard Version (ASV)
Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,

Bible in Basic English (BBE)
Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,

Darby English Bible (DBY)
Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,

Webster’s Bible (WBT)
Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,

World English Bible (WEB)
Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,

Young’s Literal Translation (YLT)
Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,

1 நாளாகமம் 1 Chronicles 6:23
இவன் குமாரன் இல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் ஆசீர்.
Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,

Elkanah
אֶלְקָנָ֥הʾelqānâel-ka-NA
his
son,
בְנ֛וֹbĕnôveh-NOH
and
Ebiasaph
וְאֶבְיָסָ֥ףwĕʾebyāsāpveh-ev-ya-SAHF
son,
his
בְּנ֖וֹbĕnôbeh-NOH
and
Assir
וְאַסִּ֥ירwĕʾassîrveh-ah-SEER
his
son,
בְּנֽוֹ׃bĕnôbeh-NOH