உள்ளத்தில் அவர்பால்
பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
சொல்வதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
பரமன் பேரிலே பற்று கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாகியவர் வாழுவார் மாளுவார்
உண்மையடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறதே
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ
உண்மையடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
செல்வம் சீர் சிறப்பு நற்குடி பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மையடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
Ullaththil Avarpaal Chords for Keyboard, Guitar and Piano