தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
துதிகள் நடுவெ கர்த்தர் தங்க- தூதர்
சேனை தம் மகிமையோடிறங்க
எழும்பு சீயோனே ஒளி வந்த்தே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரொளி வீசிடுதே
—-தேவ ஆசீர்வாதம்
நலமுடன் நம்மை இதுவரையும்
நிலை நிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணி போல கடைசி வரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்
—-தேவ ஆசீர்வாதம்
குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
வாழ்வினின்ல் துதித்திட வாய் திறப்போம்
—-தேவ ஆசீர்வாதம்
தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்
—-தேவ ஆசீர்வாதம்
Thaeva Aaseervaatham Perukiduthae Chords for Keyboard, Guitar and Piano