இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்
ஸ்தோத்திரிபோமாக
நம்மை இரட்சிக்க வந்து
தம்மை பலியாய் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்
காலம் சொல் போல் கழியும்
தண்ணீரைப் போல் வடியும்- கனாவைப்
போலேயும் ஒழியும்-
வாலிபமும் மறையும்
சீலம் எல்லாம் குறையும்
மண்ணின் வாழ்வொன்றும் நிற்கமாட்டாது
கோலப் பதுமைக்கும் நீர்க்
குமிழிக்கும் புகைக்குமே-
கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமை
கண்டு கருணைகள் விண்டு தயவுடன்
—இம்மட்டும்
பலவித இக்கட்டையும்
திகில்களையும் கடந்தோம்
பரம பாதையை தொடர்ந்தோம்
வலிய தீமையை வென்றோம்
நலியும் ஆசையைக் கொன்றோம்
வஞ்கா் பகைக்கும் தப்பி நின்றோம்
கலி என்ற தெல்லாம் விண்டோம்
கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்
—இம்மட்டும்
சன சேதம் வருவிக்கும்
கேடுகட்கோர் முடிவு
தந்து நொறுங்கினதைக் கட்டி
கன சபையை ஆதரித்
தன்பாய் அன்றன்று
தினமும் அருள் உதிக்க
செய்து தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்
—இம்மட்டும்
Immattum Jeevan Thantha Chords for Keyboard, Guitar and Piano