எந்தன் ஆத்துமா உம்மை நாடுது
எந்தன் ஜீவனும் உம்மைத் தேடுது
எந்தன் நினைவுகள் உம்மை பாடுது
எந்தன் இதயமும் வாஞ்சித்து கதறுது
அல்லேலூயா – 8
அல்லேலூயா அல்லேலூயா – 2
நீரே வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
எந்தன் ஜீவனும் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு
பயப்படுவேன் அடைக்கலம் நீரல்லவோ
யுத்தம் ஒன்று எழும்பினாலும்
பாளையம் ஒன்று எதிர் கொண்டாலும்
பகைவர் என்னை எதிர்தாலும்
எதிர்த்தவர் இடறுவார் – என்னை
…அல்லேலூயா
உம்மிடத்தில் ஒன்று கேட்டேன்
உன்னத மகிமை வேண்டி நின்றேன்
உமது வசனம் தேடி வந்தேன்
ஆலயம் நாடுவேன்
தீங்கு நாளில் கூடார மறைவில்
என்னை மறைத்து பாதுகாத்து
கன்மலை மேலே உயர்த்தி வைத்து
என்றென்றும் காத்திடுவீர்எ – என்னை
…அல்லேலூயா
பகைவர்க்கெதிரே நீர் என்னை உயர்த்த
மகிழ்வுடன் நானும் ஆனந்த பலியிட
உம்மைப் பாடி கீர்த்தனம் பண்ணுவேன்
பாடல் கேட்டிடுவீர்
உமது முகத்தை தேடுங்கள் என்றீர்
உமது முகத்தையே தேடுவேன் என்றெ
நெகிழ விடாமல் நீரே காத்திடும்
நீரே சகாயரே – எனக்கு
…அல்லேலூயா
Enthan Aaththumaa Ummai Chords for Keyboard, Guitar and Piano