Ennaalumae Thuthippaay in B Scale

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!
இந்நாள் வரையிலே உனை சேதப்படுத்தாமல்
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது
…எந்நாளு
பாவங்கள் எத்தனையோ – நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்மகா தய வைஎண்ணி
…எந்நாளு
எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடிசூட்டினதுமன்றி
நித்தியமான ஜீவனை மீட்டதால்
…எந்நாளு
தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோடிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
…எந்நாளு


Ennaalumae Thuthippaay Chords for Keyboard, Guitar and Piano

Ennaalumae Thuthippaay Chords in B Scale

தமிழ்