Aaruthalin Theyvamae in A♯ Scale

ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச் சமூகம்
எவ்வளவு இன்பமானது
உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் ஆமென்
…ஆறுதலின்
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் ஆமென்
…ஆறுதலின்
கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக் கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் ஆமென்
…ஆறுதலின்
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின
வாசலில் காத்திருப்பேன் ஆமென்
…ஆறுதலின்
ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்
கெம்பீரித்து சத்தமிடுது ஆமென்
…ஆறுதலின்


Aaruthalin Theyvamae Chords for Keyboard, Guitar and Piano

Aaruthalin Theyvamae Chords in A♯ Scale

தமிழ்