Kurusinil Thongineer in C Scale

குருசினில் தொங்கினீர்
குருதியும் சிந்தினீர்
குரு இயேசு நாதா நீர் கொல்கொதாவில்
கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே
கண்கள் அயர்ந்தே தாகத்தால் தொய்ந்தே
ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்
என் பாவம் போக்கிட வந்ததாலோ
…குருசினில்
தலை சாய்க்க உலகில் ஸ்தலமில்லை
என்றே திருவாய் மலர்ந்த தேவகுமாரா
சிலுவை தான் உமக்கு தலை சாய்க்க
இடமோ பலியாகி மீட்டிட வந்ததாலோ
…குருசினில்
கறையேதுமற்ற கன்னிகையாக
திருச்சபையை முன் நிறுத்துதற்காயோ
நிந்தை சுமந்தீர் சந்தோஷத்தோடே
நிர்மலா கொல்கொதா ஏகினீரோ
…குருசினில்
தேகமதிலே வாதையடைந்தே
பாதகரின் பாவம் ஏற்றவராய் – தேவ
னோடென்னையும் சேர்த்திடவொன்றாய்
தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்
…குருசினில்


Kurusinil Thongineer Chords for Keyboard, Guitar and Piano

Kurusinil Thongineer Chords in C Scale

தமிழ்