புவியாள வந்தவரே
அவ நாசம் நீக்கிடவே
இருள் யாவையுமே அகற்றி நீங்கவே
புதுவாழ்வு அளித்திட வந்தவரே
ஆயர் குடிலை தேடி வந்தோர்
அவனியை தீர்க்கும் பாலகன் இவரே
அதிசயம் செய்யும் தெய்வம் இவரே
அவனியிலுள்ளோரே வணங்கிடுவோம்
– புவியாள
வேதம் கூறும் ஜோதி விளக்காய்
தன்னொளி வீசிட பூவினில் பிறந்தார்
இழந்ததை நாடி தேடி வந்தோர்
அற்புத பாலனைத் தொழுதிடுவோம்
– புவியாள
மாளிகையில்லை மஞ்சமில்லை
ஏழைத் தொழுவில் இறைமகன் உதித்தார்
முன்னனை பாலகன் மேசியா இவரே
வல்லப் பிதாவை பணிந்திடுவோம்
– புவியாள
Puviyaala Vanthavarae Chords for Keyboard, Guitar and Piano