Vallamaiyin Thaevanae in E♭ Scale

E♭ = D♯

வல்லமையின் தேவனே
விண்ணுலகின் வேந்தனே
வாக்குமாறா தெய்வமே இயேசுவே
மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி
மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி
பாவி மனுஷன விடுதலையாக்கி
மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி
…வல்லமையின்
பாதாளம் கூட தெறந்திருக்குது
உமக்கு முன்னால பயந்திருக்குது
வான மண்டலம் விரிஞ்சு நிக்கிது
நீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது
…வல்லமையின்
உம்மை கண்டதும் மலைகள் ஆடுது
சமுத்திரங்கூட பயந்து ஓடுது
தூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது
நீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது
…வல்லமையின்
உமக்கு முன்னாடி பேச முடியுமா
எதுக்கு இப்படின்னு கேக்க முடியுமா
உமது வழிகள அறிய முடியுமா
உமது யோசன புரிய முடியுமா
…வல்லமையின்


Vallamaiyin Thaevanae Chords for Keyboard, Guitar and Piano

Vallamaiyin Thaevanae Chords in E♭ Scale

தமிழ்