உந்தன் துக்கம் சந்தோஷமாகும்
இயேசுவின் நாமத்தில் வெற்றி (2)
உந்தன் துக்கம் சந்தோஷமாகும்
இயேசுவின் நாமத்தில் வெற்றி மேல் வெற்றி
இயேசுவின் நாமத்தில் வெற்றி
இயேசுவின் நாமத்தில் வெற்றி
ஆஆஆஆ
தேவனால் கூடாத காரியம் ஒன்றில்லை
தேடிடு அவரால் வெற்றி
உன்னாலும் ஆகாத காரியமில்லை
உணர்ந்திடு அவரால் வெற்றி(2)
இதயத்தில் விசுவாசம் உண்டாகுமாயின்
இடம் பெயரும் மலை வெற்றி
உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்ற
உண்மையை உணர்ந்தால் வெற்றி(2)
—உந்தன்
உந்தன் விசுவாசம் உலகத்தை வெல்லும்
உணர்ந்து போராடினால் வெற்றி
தந்திட்டார் பரத்தின் திறவுகோல் உன்னிடம்
திறந்திடு நிச்சயம் வெற்றி(2)
மைந்தனின் நாமத்தில் கேட்பவை யாவும்
மண்ணுலகில் வரும் வெற்றி
உன்னத் மைந்தன் இயேசு என்று நம்பும்
உன்னையன்றி யாருக்கு வெற்றி (2)
—உந்தன்
புவியில் கட்டிடும் யாவும் பரத்தில்
கட்டப்படுவதால் வெற்றி
அவருடன் நம்மை அமர்ந்திட செய்தார்
அடைந்தோம் அதனால் வெற்றி(2)
சத்துருவை நீ எதிர்த்து நின்றுல்
சடுதியாய் ஓடுவான் வெற்றி
கர்த்தரின் கையில் நீ ராஜமுடியும்
கிரீடமுமாவாய் வெற்றி(2)
—உந்தன்
வெற்றி உனக்குத்தான் வெற்றி
வெற்றி நிச்சயம் வெற்றி
வெற்றி உனக்குத்தான் வெற்றி
வெற்றி நிச்சயம் வெற்றி
Unthan Thukkam Chords for Keyboard, Guitar and Piano