பாவ இருளில் தடுமாறி
அலைந்தேன் நான்
ஜீவ ஒளியை காட்டி என்னை மீட்டாரே
உம் கண்களில் கண்ணீரை
கண்டேன் என் இயேசுவே – 2
மரண இருளின் பாதையிலே
பாவி நானும் நடந்து சென்றேன்
இரக்கம் காட்டி அழைத்தவரே
இரத்தம் சிந்தி மீட்டவரே
உம் கரத்திலே காயங்கள்
கண்டேன் என் இயேசுவே – 2
…பாவ இருளில்
ஆபத்து காலத்தில் தூக்கியென்னை
ஆறுதல் தந்த அன்பின் தெய்வமே
கலங்கிடாதே என்றவரே
கரத்தை நீட்டி அணைத்தவரே
உம் விலாவிலே காயங்கள்
கண்டேன் என் இயேசுவே – 2
…பாவ இருளில்
ஆறுகளை நான் கடந்து சென்றேன்
அவைகள் என் மேல் புரளவில்லை
அக்கினி ஜீவாலை எந்தனின் மேல்
அவியாமல் நீர் பாதுகாத்தீர்
உம் கால்களில் காயங்கள்
கண்டேன் என் இயேசுவே – 2
…பாவ இருளில்
Paava Irulil Thadumaari Chords for Keyboard, Guitar and Piano