மேக மீதினில் வேகமுடன்
மேசியா இயேசுவே வந்திடுவார்
மின்னலைப் போன்ற பேரொளியில்
மத்திய வானில் தோன்றிடுவார்
எண்ணிலடங்கா பக்தர்களும்
விண்தூத சேனை சூழ்ந்திடவே
…மேக மீதினில்
யூதர்கள் கூடி சேர்ந்தனரே
வேதமும் நிறைவேறிடுதே
இவ்வடையாளம் நோக்கிடுவோம்
இயேசுவின் நாளை சந்திக்கவே
…மேக மீதினில்
தாமதம் ஏனோ தம் வருகை
தீவிரம் வந்தால் நம் நிலைமை
எக்காள சத்தம் கேட்டிடுமே
கர்த்தரைக் காண ஆயத்தமா
…மேக மீதினில்
Maeka Meethinil Vaekamudan Chords for Keyboard, Guitar and Piano