Kavarchchi Naayakanae in C Scale

கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே
கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
என்னை இழுத்துக் கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூருவேன்
…உமக்கே
திராட்சை இரசம் பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே
…உமக்கே
இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே
…உமக்கே
உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜுவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா
…உமக்கே
என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ் தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே
…உமக்கே
காட்டு மரங்களுக்குள்
கிச்சிலி மரம் நீரே
அன்பரே உம் நிழலில்
அமர்ந்து இன்புறுவேன்
…உமக்கே
வாரும் என் நேசரே
வயல் வெளியில் தங்கிடுவோம்
நேசத்தின் உச்சிதங்களை
நிறைவாய் பொழிவேன் ஐயா
…உமக்கே
வாயின் முத்தங்களால்
முத்தங்கள் செய்திடுமே
உம்மைப்போல் மாற்றிவிடும்
உமக்குள் வைத்துக் கொள்ளும்
…உமக்கே


Kavarchchi Naayakanae Chords for Keyboard, Guitar and Piano

Kavarchchi Naayakanae Chords in C Scale

தமிழ்