ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்து போற்றிப் பாடுங்கள்
தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே
இன்றைய தினம் கூடி
உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமமதை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதிபாடி மகிழ்வோம்
—-ஜாதிகளே
ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு ஈந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெய கீதம் பாட ஜெயமளிப்பார்
—ஜாதிகளே
பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையிலே
சோர்ந்திடாமல் தாங்க பெலனளிப்பார்
—ஜாதிகளே
எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்தப் பிள்ளையாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட
—ஜாதிகளே
வானம் பூமி யாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை
—ஜாதிகளே
Jaathikalae Ellorum Karththarai Chords for Keyboard, Guitar and Piano