எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்)
என்றும் நடத்துவார்
ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே
அனுதினம் அன்பருடன்
இணைந்து செல்லுவேன்
அற்புதமாம் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் தூய அன்பு
இப்பூவினில் இவரைப்போல்
அன்பர் எவருண்டு-மாறாதவர்
எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்
… எந்தன் இயேசு
சர்வ வல்ல தேவனிவர்
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
எந்நாளுமே எந்தனையே
தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன்
என்றென்றுமாய் எந்தன் இயேசுவை
… எந்தன் இயேசு
கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
சீரான பாதை நடத்திடுவார்-
எந்தன் வழி செம்மையாக்கி
ஏற்று நிறுத்துவார் – காத்திடுவார்
எந்தன் நேசர் என்றும் பின் செல்லுவேன்
… எந்தன் இயேசு
குற்றங்களை மன்னித்தவர்
தம்மண்டை என்னை சேர்த்து கொண்டார்
எந்தன் நேசர் ஒப்பற்றவர்
பொறுமை நிறைந்தவர்-சார்ந்திடுவேன்
இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்
… எந்தன் இயேசு
Enthan Yesu Vallavar Chords for Keyboard, Guitar and Piano