என்னை ஆசீர்வதித்தாலொழிய
நான் உம்மை விடுவதில்லை உம் – 2
கிருபை தந்தாலொழிய நான்
உம்மை விடுவதில்லை – 2
– என்னை
இரவு முழுவதும் உந்தன் பாதம்
அமர்ந்து ஜெபித்திடுவேன் ஒரு
முடிவு கிடைக்கும் வரைக்கும்
நான் கதறி அழுதிடுவேன் – 2
ஏனோ தெரியவில்லை என்
இதயமும் அழுகிறது – 2
என் தேவனே என் இயேசுவே – 2
இந்த ஒரு விசை இரங்கிடும் – 3
கிருபை தந்தாலொழிய நான்
உம்மை விடுவதில்லை – 2
– என்னை
வேர்னை இரத்தமாய் மாறும் வரைக்கும்
கதறி ஜெபித்திடுவேன்
உம் போர்வயை என் மேல்
விரிக்கும் வரைக்கும்
கதறி அழுதிடுவேன்
உலகமே இருண்டாலும் என்
உள்ளம் இருள்வதில்லை
என் தெய்வமே ஒளி தரும் தீபமே – 2
என் கண்ணீரை நினைத்தருளும் – 3
-உம் கிருபை – என்னை
என் ஆவி ஆத்துமா சரீரம்
அனைத்தையும்
ஒருமுகப்படுத்திடுவேன்
இந்த பாவி என்னையும் நல்லவனாக்கி
உம் சமூகம் சேர்த்திடுமே – 2
மன்னிக்கும் மன்னவனே
என் மறைபொருள் ஞானவானே – 2
என் தகப்பனே என் இயேசுவே – 2
இந்த ஏழைக்கு இரங்கிடும் – 3
-உம் கிருபை – என்னை
Ennai Aaseervathiththaaloliya Chords for Keyboard, Guitar and Piano