பாரீர் கெத்சமனே
பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே
தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும்
பாடுகள் எனக்காயே
– பாரீர்
அப்பா இப்பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத்
தத்தம் செய்தேன் என்றாரே
– பாரீர்
இரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே
வேண்டுதல் செய்தனரே
மும்முறை தரை மீதே
தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே
– பாரீர்
அன்பின் அருள் மொழியால்
ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
நொந்து அலறுகின்றார்
– பாரீர்
என்னையும் தம்மைப் போல
மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன்
– பாரீர்
Paareer Kethsamanae Chords for Keyboard, Guitar and Piano