Psalm 49 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽மக்களினங்களே, அனைவரும்␢ இதைக் கேளுங்கள்;␢ மண்ணுலகில் வாழ்வோரே,␢ யாவரும் செவிகொடுங்கள்.⁾2 ⁽தாழ்ந்தோரே, உயர்ந்தோரே,␢ செல்வர்களே, ஏழைகளே,␢ அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.⁾3 ⁽என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்;␢ என் மனம் விவேகமானவற்றை␢ ஆழ்ந்து சிந்திக்கும்.⁾4 ⁽நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில்␢ நான் கருத்தாய் உள்ளேன்;␢ யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்.⁾5 ⁽துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்?␢ என்னை வளைத்துக்கொண்டு␢ கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு␢ நான் அஞ்சுவானேன்?⁾6 ⁽தம் செல்வத்தில்␢ நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ␢ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப்␢ பெருமையாகப் பேசுகின்றனர்.⁾7 ⁽உண்மையில், தம்மைதாமே␢ மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது;␢ தம் உயிரை மீட்க எதையும்␢ கடவளுக்குத் தர இயலாது.⁾8 ⁽மனித உயிரின் ஈட்டுத் தொகை␢ மிகப் பெரிது;␢ எவராலும் அதனைச் செலுத்த இயலாது.⁾9 ⁽ஒருவரால் என்றென்றும்␢ வாழ்ந்திடமுடியுமா?␢ படுகுழியைக் காணாமல்␢ இருந்திட முடியுமா?⁾10 ⁽ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும்␢ மாண்டழிவதுபோல,␢ ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை␢ நாம் காண்கின்றோம் அன்றோ!␢ அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப்␢ பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.⁾11 ⁽கல்லறைகளே* அவர்களுக்கு␢ நிலையான வீடுகள்!␢ அவையே எல்லாத் தலைமுறைக்கும்␢ அவர்கள் குடியிருப்பு!␢ அவர்களுக்குத் தங்கள் பெயரில்␢ நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை.⁾12 ⁽ஒருவர் தம் மேன்மையிலேயே␢ நிலைத்திருக்க முடியாது;␢ அவர் விலங்குகளைப் போலவே␢ மாண்டழிவார்.⁾13 ⁽தம்மையே மதியீனமாக␢ நம்பியிருப்போரின் முடிவு இதுவே;␢ தம் சொத்திலேயே மகிழ்ச்சி␢ கொள்வோரின் கதி இதுவே. (சேலா)⁾14 ⁽பலியாடுகளைப் போலவே அவர்களும்␢ சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்;␢ சாவே அவர்களின் மேய்ப்பன்;␢ *அவர்கள் நேரடியாகக்␢ கல்லறைக்குள் செல்வர்;*␢ அப்பொழுது அவர்களது உருவம்␢ மாய்ந்து போகும்;␢ பாதாளமே அவர்களது குடியிருப்பு.⁾15 ⁽ஆனால், கடவுள்␢ என்னுயிரை மீட்பது உறுதி;␢ பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து␢ என்னைத் தூக்கி நிறுத்துவார். (சேலா)⁾16 ⁽சிலர் செல்வர் ஆனாலோ,␢ அவர்களின் குடும்பச் செல்வம் § பெருகினாலோ,␢ அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!⁾17 ⁽ஏனெனில் சாகும்போது அவர்கள்␢ எதையும் எடுத்துப் போவதில்லை;␢ அவர்களது செல்வமும்␢ அவர்கள்பின் செல்வதில்லை.⁾18 ⁽உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை␢ ஆசிபெற்றோர் என்று கருதினாலும்,␢ ‛நீங்கள் நன்மையையே␢ நாடினீர்கள்’ என␢ மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,⁾19 ⁽அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு␢ சேர்ந்து கொள்வர்;␢ ஒருபோதும் பகலொளியைக்␢ காணப் போவதில்லை.⁾20 ⁽மனிதர் தம் மேன்மையிலேயே␢ நிலைத்திருக்க முடியாது;␢ அவர்கள் விலங்குகளைப் போலவே␢ மாண்டழிவர்.⁾