Psalm 149 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽அல்லேலூயா!␢ ஆண்டவருக்குப் புதியதொரு § பாடலைப் பாடுங்கள்;␢ அவருடைய அன்பர் சபையில்␢ அவரது புகழைப் பாடுங்கள்.⁾2 ⁽இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக்␢ குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!␢ சீயோனின் மக்கள் தம் அரசரை␢ முன்னிட்டுக் களிகூர்வார்களாக!⁾3 ⁽நடனம் செய்து அவரது பெயரைப்␢ போற்றுவார்களாக;␢ மத்தளம் கொட்டி, யாழிசைத்து␢ அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!⁾4 ⁽ஆண்டவர் தம் மக்கள் மீது␢ விருப்பம் கொள்கின்றார்;␢ தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு␢ வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.⁾5 ⁽அவருடைய அன்பர்␢ மேன்மையடைந்து களிகூர்வராக!␢ மெத்தைகளில் சாய்ந்து␢ மகிழ்ந்து கொண்டாடுவராக!⁾6 ⁽அவர்களின் வாய்␢ இறைவனை ஏத்திப் புகழட்டும்;␢ அவர்களின் கையில் இருபுறமும்␢ கூர்மையான வாள் இருக்கட்டும்.⁾7 ⁽அவர்கள் வேற்றினத்தாரிடம்␢ பழிதீர்த்துக் கொள்வார்கள்;␢ மக்களினங்களுக்கு␢ தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;⁾8 ⁽வேற்றின மன்னர்களை␢ விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;␢ உயர்குடி மக்களை␢ இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.⁾9 ⁽முன்குறித்து வைத்த தீர்ப்பை␢ அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;␢ இத்தகைய மேன்மை␢ ஆண்டவர் தம் அன்பர்␢ அனைவருக்கும் உரித்தானது.␢ அல்லேலூயா!⁾