திரியேக தேவனைத் துதித்திடுவோம்
நிதம் அவர் நாமத்தை உயர்த்திடுவோம்
நீடித்த நாட்களாய் நிறைந்தெம்மையே
நித்தமும் நடத்துவார்
மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
மேன்மையும் மகிமையுமே
மாறிடா நல் இயேசுவே
பாவத்தில் ஜீவித்த காலத்திலே
பரிவுடன் இரட்சிக்க வந்தவரே
நீங்காத விசுவாசப் பாதையிலே
தாங்கினீர் உம் தயவால்
—திரியேக தேவனை
சோதனை சூழ்கையில் ஜெயக்கொடியாய்
சோர்ந்திடும் உள்ளதில் மாபெலனாய்
தனிமையில் ஏற்றதோர் தோழனுமாய்
கனிவாய் கரம் பிடித்தீர்
—திரியேக தேவனை
அபிஷேகம் செய்து எம் சிரசதனை
ஆனந்த சந்தோஷத்தால் நிறைத்தே
அகமதில் இன்ப கீதம் அளித்தே
மகிமையில் முடிசூட்டிடுவீர்
—திரியேக தேவனை
எக்காள நாதம் வானில் முழங்க
ஏகிடுவார் சுத்தர் இயேசுவுடன்
அழிவற்றோராய் அவரோடிணைந்தே
ஆளுவோம் சீயோனிலே
—திரியேக தேவனை
Thiriyaeka Thaevanaith Thuthiththiduvom Chords for Keyboard, Guitar and Piano