Vallamai Thaevai Thaevaa Chords

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா
பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை
மாம்சமான யாவர் மீதும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர்வாலிபர் யாவரும்
தீர்க்கதரி சனம்சொல்வாரே
-பொழிந்திடும்
பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடு
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும்
-பொழிந்திடும்
மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையாக ஆவியைத் தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்திர சுவிகாரம் ஈந்திடும்
-பொழிந்திடும்


Vallamai Thaevai Thaevaa Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்