Ummaiththaan Paaduvaen in G♯ Scale

உம்மைத்தான் பாடுவேன்
உயிர் தந்த தெய்வமே
உமக்காய் ஓடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஆராதனை ஆராதனை
தகப்பனே உமக்குத்தான்
உமது சித்தத்தால் உலகமே வந்தது
உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீா்
… ஆராதனை
நீரே சிருஷ்டித்தீர், காண்கின்ற அனைத்தையும்
நீரே படைத்தீர், வானம் பூமி அனைத்தும்
… ஆராதனை
கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?
… ஆராதனை
ஜனங்கள் யாவரும், வணங்குவார் உம்மையே
தேசம் னைத்தும், இயேசு நாமம் சொல்லும்
… ஆராதனை
வல்லவர், சர்வ வல்லவர், ஆளுகை செய்கின்றீர்
மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்
… ஆராதனை
உலகின் நாடுகள், உமக்கே உரிய
நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்
… ஆராதனை
பெலனும், ஞானமும், உமக்கே உரியன
மாட்சிமை, வல்லமை, உமக்குத்தானே சொந்தம்
… ஆராதனை


Ummaiththaan Paaduvaen Chords for Keyboard, Guitar and Piano

Ummaiththaan Paaduvaen Chords in G♯ Scale

தமிழ்