உம்மை போல இந்த உலகிலே
வேறொருவரும் இல்லையே
அம்மாவும் நீரே என்
அப்பாவும் நீரே என்
ஆத்தும நேசர் நீரல்லோ என்
அம்மாவும் நீரே என்
அப்பாவும் நீரே என்
இதய துடிப்பும் நீரல்லோ
அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
மனித உறவுகளால் நொறுக்கப்பட்டேன்
வேதனையில் நான் வாடுகையில் – உம்
அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்
…உம்மை
குழப்பமான சில நேரங்களில்
கேள்விகள் அநேகம் எழுகையில்
உம் ஞானத்தினால் என்னை வழிநடத்தும்
உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்
…உம்மை
Ummai Pola Intha Ulakilae Chords for Keyboard, Guitar and Piano