Thuthiyin Aatai Anninthu Chords

துதியின் ஆடை அணிந்து
துயரமெல்லாம் மறந்து
துதித்து மகிழ்ந்திருப்போம் நம்
தூயவரில் மகிழ்ந்திருப்போம்
இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
இதிலே களிகூறுவோம்
புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம்
துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்
துயரம் அனைத்தும் மறந்திருப்போம்
கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்
அது தானே நமது பெலன்
எத்தனையோ நன்மை செய்தவரை
இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம்
…துதித்து
நன்றியோடும் புகழ் பாடலோடும்
அவர் வாசலில் நுழைந்திடுவோம்
நல்லவரே கிருபையுள்ளவரே
என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்
…துதித்து
புலம்பலுக்கு பதில் ஆனந்தமே
இன்று ஆனந்தம் ஆனந்தமே
ஒடுங்கி போன ஆவி ஓடிப்போச்சு
இன்று உற்சாக ஆவி வந்தாச்சு
…துதித்து
துயரத்துக்கு பதில் ஆறுதலே
இன்று ஆறுதல் ஆறுதலே
சாம்பலுக்கு பதில் சிங்காரமே
இன்று சிங்காரம் சிங்காரமே
…துதித்து
கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஜனங்கள் நாம்
அவர் தாமே நம்மை நடத்துகின்றார்
அவரின் ஆடுகள் நாம்
…துதித்து


Thuthiyin Aatai Anninthu Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்