தேடி இயேசு வந்தார் என்னைத்
தேற்றி வாழவைத்தார்
கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
…தேடி
பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார்
கழுவி மீட்டுக் கொண்டார்
…தேடி
நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன் – நான்
சுகமானேன் சுகமானேன்
…தேடி
Thaeti Yesu Vanthaar Chords for Keyboard, Guitar and Piano