கர்த்தரை நம்பிடுங்கள் அவர்
கைவிடவே மாட்டார் அவர்
கைவிடவே மாட்டார்
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்
என்றே கவலைப்படல் வேண்டாம்
உணவை விட உயிரும்
உடையை விட உடலும்
உயர்ந்தவை அல்லவா
வானத்துப் பறவையைப் பாருங்கள் – அவை
விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
சேர்த்து வைப்பதுமில்லை
கர்த்தர் காக்கின்றார்
….கர்த்தரை
கவலைப்படுவதினால்
எவன் தன் வளர்த்தியிலே
ஒரு முழம் கூட்ட முடியும்
எதை உடுப்போம் என்று
கவலையே வேண்டாம்
சொல்வதைக் கேளுங்கள்
வயல்வெளி மலர்களைப் பாருங்கள் – அவை
உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
கவலைப்படுவதுமில்லை
கர்த்தர் உடுத்துகின்றார்
….கர்த்தரை
Karththarai Nampidungal Chords for Keyboard, Guitar and Piano