Karththar Yesu Vaakkai Nampuvom in E♭ Scale

E♭ = D♯

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம்
என்றும் கர்த்தர் அவரில்
நிலைத்து ஓங்குவோம்
சுத்தராய் வாழ்ந்துமே
தேவ சேவை செய்து
இயேசு ராஜன் பின் செல்லுவோம்
சுற்றி நிற்கும் பாவம் யாவும்
முற்றும் தள்ளியே-கர்த்தர்
ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம்
தேவ கிருபையில் நிலைத்து நின்றிட
தாழ்மையோடு தேவபாதம் சேர்ந்திடுவோம்
…கர்த்தர் இயேசு
வானம் பூமி யாவும்
முற்றும் மாறிப்போயினும்
தேவ வார்த்தை என்றுமாய்
நிலைத்து நிற்குமே-சத்திய
வாக்கினில் உறுதி அடைந்துமே
சத்திய தேவன் வாக்கை
நம்பி முன்செல்லுவோம்
…கர்த்தர் இயேசு
வாக்குத்தத்தம் செய்த கர்த்தர்
உண்மையுள்ளவர்- முற்றுமாக
நம்பியே முன்னே செல்லுவோம்
கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை
பரம தேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம்
…கர்த்தர் இயேசு


Karththar Yesu Vaakkai Nampuvom Chords for Keyboard, Guitar and Piano

Karththar Yesu Vaakkai Nampuvom Chords in E♭ Scale

தமிழ்