Aaseervathiyum Karththarae in G♯ Scale

ஆசீர்வதியும் கர்த்தரே
ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரில் நித்தம் மகிழவே
வீசீரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா எம்மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்…
இம்மண மக்களோடென்றும்
என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும்
ஓங்க செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க ஊக்க மருளுமே
ஒற்றுமையாக்கும் இவரை
ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சார்ந்துமே
பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் இயேசு ராஜனாம்
உற்ற மணாயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே
பூதல ஆசீர்வாதத்தால்
பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன்


Aaseervathiyum Karththarae Chords for Keyboard, Guitar and Piano

Aaseervathiyum Karththarae Chords in G♯ Scale

தமிழ்