Nee Malaimael Ulla Pattanam in F♯ Scale

நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறந்து வாழாதே – நீ
மறைந்திருக்கும் காலமல்ல
எழுந்து பிரகாசி (ஒளிவீசு) – 2
உலகின் ஒளியாய் வாழ தேவன்
உன்னை அழைத்தார்
அவர்க்காய் சாட்சியாய் வாழ
தேவன் உன்னை அழைத்தார்
கர்த்தரே தேவன் என்று ஜாதிகள்
அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய்
– நீ மலைமேல்
அழிகின்ற ஜனங்களை மீட்க
தேவன் உன்னை அழைத்தார்
திறப்பின் வாசலில் நிற்க தேவன்
உன்னை அழைத்தார்
கர்த்தரே தேவன் என்று ஜாதிகள்
அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய்
– நீ மலைமேல்
இருளின் அதிகாரம் உடைக்க
வல்லமை உனக்களித்தார்
பூமியில் அக்கினியை இறக்
வரங்களை உனக்களித்தார்
பாதாளத்தை வெறுமையாக்கி
பரலோகத்தை நிரப்ப
திறவுகோல் உனக்களித்தார்
– நீ மலைமேல்


Nee Malaimael Ulla Pattanam Chords for Keyboard, Guitar and Piano

Nee Malaimael Ulla Pattanam Chords in F♯ Scale

தமிழ்