பரிசுத்தம் பெற வந்துவிட்டிர்களா
ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்
பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா?
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்?
மாசில்லா – சுத்தமா
திருப்புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கிட குணம் மாறிற்றா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால்?
மறு ஜென்மக் குணம் அடைந்தீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்?
மணவாளன் வரக் களிப்பீர்களா?
தூய நதியின் ஸ்நானத்தினால்?
மோட்சக் கரை ஏறிச் சுகிப்பீர்களா ?
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் ?
மாசுகறை நீங்கும்! நீசப் பாவியே!
சுத்த இரத்தத்தின் சக்தியினால்;
முக்திப் பேறுண்டாகும்,குற்றவாளியே!
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
Parisuththam Pera Vanthuvittirkalaa Chords for Keyboard, Guitar and Piano