Enna Sukam Aahaa Enna in A Scale

என்ன சுகம் ஆஹா என்ன சுகம்
என் இரட்சகரின் சமுகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச பேரானந்தம்
அதை பெற்று அனுபவித்தால் என்ன சுகம்
பொன்னகர் வீதியில் எந்நேரம் உலாவலாம்
கின்னரம் தம்புரு வீணை
இன்னிசை கேட்கலாம்
ஜீவ நதியில் குளித்து களிக்கலாம்
ஜீவ விருட்சத்தின் கனியும் புசிக்கலாம்
தங்க கிரீடம் தலையில் தரிக்கலாம்
சிங்காசனம் பெற்று ஜெயகீதம் பாடலாம்
துன்பம் ஒழிந்துமே இன்பமடையலாம்
தூயரின் சமுகத்தில் துதி கொண்டாடலாம்
தூயரின் தூதர்களுடனே நாம் மகிழலாம்
தூயராம் இயேசு ராஜருடனே நாம் வாழலாம்
இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள்
சிங்காசத்தினின்று ஜெயகீதம் பாடலாம்
பக்தர்கள் கூட்டத்தில் பாடிக் களிக்கலாம்
பரம பிதாவின் பணிவிடை செய்யலாம்


Enna Sukam Aahaa Enna Chords for Keyboard, Guitar and Piano

Enna Sukam Aahaa Enna Chords in A Scale

தமிழ்