Aananthamae! Jeyaa! Jeyaa! in D♭ Scale

D♭ = C♯

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர், நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்
சங்கு கனம், வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் இரட்சகரேசு நமை – வெகு
இரக்கங்கிருபையுடன் இரட்சித்ததால்
….ஆனந்தமே
முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோச கஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடை யுணவும் – வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால்
….ஆனந்தமே
பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும்
வெகு கொடும் பாழ் கொள்ளை
நோய் விஷ தோஷத்திற்கும்
தஞ்ச இரட்சகர் தவிர்த்து நமை
இத்தரை தனில் குறை தணித்தாற்றியதால்
….ஆனந்தமே


Aananthamae! Jeyaa! Jeyaa! Chords for Keyboard, Guitar and Piano

Aananthamae! Jeyaa! Jeyaa! Chords in D♭ Scale

தமிழ்