கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு
காலமெல்லாம் வாழ்ந்திருந்தேன்
மிச்சமான தொண்ணுமில்லை
கண்ணீரைத்தான் வழிச்செடுத்தேன் – 2
தேறினது ஒண்ணுமில்ல
மீதியான தொண்ணுமில்லை – 2
எங்களின் கஷ்டம் நீக்க
எங்க ராஜா வாங்க ராஜா – 3
எங்களின் கஷ்டம் நீக்க
எங்க ராஜா வாங்க ராஜா
எங்க ராஜா இயேசு ராஜா
எங்க கஷ்டம் நீக்க வாங்க ராஜா – 2
சிந்தை போன போக்கிலெல்லாம்
ஓடி ஓடி நான் திரிந்தேன்
வெற்றியான தொண்ணுமில்லை
தோல்விகளத்தான் தழுவி நின்றேன்
சோதனைத்தான் மிஞ்சினதய்யா
வேதனையும் கண்ணீரும் தான்
வேண்டாம் இந்தப் பாடு
தாங்கிட வாருமய்யா
வேண்டாம் இந்தப் பாடு
தாங்கிட வாருமய்யா
– எங்க ராஜா
எத்தனையோ தருணம் தந்தீர்
உம்மண்டை வந்து சேர
அத்தனையும் தட்டி கழித்தேன்
நிம்மதியை நான் இழந்தேன்
தேற்றிட வாருமய்யா
ஆற்றிட வாருமய்யா
உந்தனின் சமூகத்திலே
எனக்கோர் இடம் வேண்டும்
உந்தனின் சமூகத்திலே
தாங்கிட வாருமய்யா
– எங்க ராஜா
Kashdappattu Nashdappattu Chords for Keyboard, Guitar and Piano