அழைக்கிறர் இயேசு உன்னை
யுத்தம் செய்ய அழைக்கிறர்
அழைக்கிறர் மீட்பர் உன்னை
இரத்தம் சிந்த அழைக்கிறர்
மரணமோ ஜீவனோ நாசமோ மோசமோ
பட்டயமோ பட்டினியோ ஓன்றுஞ்செய்யாதே
துன்பமோ தொல்லையோ ஆளுகையோ வல்லமையோ
நடப்பதோ வருவதோ அன்பை மாற்றதோ
தலை முடிக்கு கணக்கு வைக்கும் தேவன் அவர்
கண்மணி போல் கருத்துடனே காத்திடுவார்
இரத்தசாட்சி ஸ்தேவான் போல் உன்னையவர்
முற்றும் மாற்ற இன்று உன்னை அழைக்கின்றர்
திறப்பின் வாயில் நிற்க்கத்தக்க மனிதன் யாயே
என்று தேடும் தேவனை நீ சந்திப்பாயா
என் காரியம் நிறைவேற செல்பவன் யார்
என்று கேட்கும் தேவன் உன்னை அழைக்கின்றர்
நல்ல போர் சேவகனாய் தீங்கடைய
நல்ல ஓர் போராட்டம் நடத்தியே
ஓட்டம் முடித்து நற்பரிசாம் நித்திய
ஜீவ கிரீடம் பெற்றிடவே அழைக்கின்றர்
Alaikkirar Yesu Chords for Keyboard, Guitar and Piano