Nehemiah 12 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், ஏசுவாவுடனும், வந்த குருக்களும், லேவியரும் பின்வருமாறு: செராயா, எரேமியா, எஸ்ரா,2 அமரியா, மல்லூக்கு, அத்தூசு,3 செக்கனியா, இரகூம், மெரமோத்து,4 இத்தோ, கின்னத்தோய், அபியா,5 மியாமின், மாதியா, பில்கா,6 செமாயா, யோயாரிபு, எதாயா,7 சல்லூ, அமோக்கு, இல்க்கியா, எதாயா ஆகியோர் ஏசுவாவின் நாள்களில், குருக்களுக்கும் — தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர்.8 லேவியர்களில் ஏசுவா, பின்னூய், கத்மியேல், செரேபியா, யூதா, மத்தனியா ஆகியோரும், இவர்கள் சகோதரர்களும் நன்றிப் பாடல்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.9 பக்புக்கியாவும், உன்னியும் இவர்களின் சகோதரர்களும் அவர்களுக்கு எதிரே நின்று கவனித்துக் கொண்டு வந்தார்கள்.10 ஏசுவாவுக்கு யோவாக்கிம் பிறந்தார்; யோவாக்கிமுக்கு எலியாசிபு பிறந்தார்; எலியாசிபுக்கு யோயாதா பிறந்தார்.11 யோயாதாவுக்கு யோனத்தான் பிறந்தார்; யோனத்தானுக்கு யாதுவா பிறந்தார்.12 யோவாக்கிமின் நாள்களில் குலத் தலைவர்களாக இருந்த குருக்கள் பின்வருமாறு; செராயா வழிவந்த மெராயா; எரேமியா வழிவந்த அனனியா;13 எஸ்ரா வழிவந்த மெசுல்லாம்; அமரியா வழிவந்த யோகனான்;14 மல்லூக்கி வழிவந்த யோனத்தான்; செபனியா வழி வந்த யோசேப்பு;15 ஆரிம் வழிவந்த அத்னா; மெரயோத்து வழிவந்த எல்க்காய்;16 இத்தோ வழிவந்த செக்கரியா; கின்னத்தோன் வழிவந்த மெசுல்லாம்;17 அபியா வழிவந்த சிக்ரி; மின்யமீன், மோவதியா, பில்த்தாய்;18 பில்கா வழிவந்த சம்முவா; செமாயா வழிவந்த யோனத்தான்;19 யோயாரிபு வழிவந்த மத்தனாய்; எதாயா வழிவந்த உசீ;20 சல்லாம் வழிவந்த கல்லாய்; அமோக்கு வழிவந்த ஏபேர்;21 இல்க்கியா வழிவந்த அசுபியா; யாதாய் வழிவந்த நத்தானியேல் ஆவர்.22 லேவியரில், எல்யாசிபு, யோயாதா, யோகானான், யாதுவா ஆகிய தலைமைக் குருக்களின் காலத்திலிருந்து பாரசீகரான தாரியுவின் காலம் வரையுள்ள லேவியர் குலத் தலைவர்களும் குருக்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.23 லேவியின் மக்களான குலத்தலைவர்கள், குறிப்பேட்டில் எல்யாசிபின் மகன் யோகனானின் நாள்கள் வரை பதிவு செய்யப்பட்டிருந்தனர்.24 லேவியரின் தலைவர்களான அசபியா, சேரேபியா, கத்மியேலின் மகன் ஏசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்களின் சகோதரரும் நின்று கொண்டு, கடவுளின் மனிதர் தாவீது கொடுத்த கட்டளையின்படி, புகழும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்தி வந்தனர்.25 மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூபு ஆகிய வாயிற்காப்போர், வாயிலருகில் இருந்த கருவூல அறைகளைக் காத்து வந்தனர்.26 இவர்கள் யோசாதாக்கிற்குப் பிறந்த ஏசுவாவின் மகன் யோவாக்கிமின் காலத்திலும், ஆளுநர் நெகேமியா, குருவும் சட்ட வல்லுநருமான எஸ்ரா ஆகியோரின் காலத்திலும் வாழ்ந்தனர்.27 எருசலேம் மதிலின் அர்ப்பண நாள் வந்தபோது லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள். ஏனெனில், மதில் அர்ப்பணம் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவை ஒலிக்கப் பாடல்களுடனும் கொண்டாட வேண்டியிருந்தது.28 பாடகர்கள், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் நெற்றோபாயரின் சிற்றூர்களிலிருந்தும்,29 பெத்கில்காலிலிருந்தும், கேபா, அஸ்மவேத்து ஆகிய பகுதிகளிலிருந்தும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் எருசலேமைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைத்திருந்தார்கள்.30 குருக்களும் லேவியரும் தங்களைத் தூய்மை செய்துகொண்டு மக்களையும் வாயில்களையும் மதில்களையும் தூய்மைப்படுத்தினர்.⒫31 அப்பொழுது நான், யூதாவின் தலைவர்களை மதில்மேல் ஏறச் சொல்லி, புகழ்பாட இரண்டு பாடகர் குழுக்களை நிறுத்தினேன். ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பைமேட்டு வாயிலை நோக்கி, மதிலின்மேல் பவனியாகச் சென்றார்கள்.32 அவர்களுக்குப் பின்னால் ஒசயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேரும்,33 அசரியா, எஸ்ரா, மெசுல்லாம்,34 யூதா, பென்யமின், செமாயா, எரேமியா ஆகியோரும் சென்றனர்.35 மேலும் எக்காளம் ஏந்தி இருந்த குருத்துவப் புதல்வர்கள்; ஆசாபு வழி வந்த சக்கூருக்குப் பிறந்த மீக்காயாவின் மைந்தனான மத்தனியாவின் புதல்வனான செமாயாவின் மைந்தனான யோனத்தானின் மகன் செக்கரியாவும்,36 அவர் சகோதரர்களான செமாயா, அசரியேல், மில்லலாய், கில்லேல், மாவாய், நெத்தனேல், யூதா, அனானி என்பவர்களும் கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளை ஏந்தியிருந்தனர். நீதிச் சட்ட வல்லுநரான எஸ்ரா அவர்களுக்கு முன்பாகச் சென்றார்.37 அவர்கள் ஊருணி வாயிலைக் கடந்து தங்களுக்கு எதிரே இருந்த தாவீது நகரின் படிகளின் வழியாக மேலே சென்று தாவீதின் அரண்மணைக்கு மேலே செல்லும் மதிற்சுவரின் படிகளைக் கடந்து கிழக்கே இருந்த தண்ணீர் வாயில்வரை சென்றனர்.⒫38 இரண்டாவது பாடற் குழுவினர் இடப்பக்கமாக நடந்து செல்லுகையில், நானும் மக்களில் பாதிப்பேரும் மதிலின் மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். சூளைக் காவல் மாடத்தைக் கடந்து அகன்ற மதில்வரை வந்தோம்.39 எப்ராயிம் வாயில்மேலும், பழைய வாயில்மேலும், மீன்வாயில்மேலும், அனனியேல் காவல் மாடம், மேயா காவல் மாடம் ஆகியவை வழியாகவும் ஆட்டு வாயிலை அடைந்தோம். அவர்களோ ‘காவலர்’ வாயிலில் நின்று கொண்டார்கள்.⒫40 பின்பு, இரண்டு பாடகர் குழுவினர்களும் கடவுளின் இல்லத்தில் நின்றுகொண்டார்கள். நானும் என்னோடு அலுவலர்களில் பாதிப்பேரும் அங்கு இருந்தோம்.41 குருக்களில் எலியாக்கிம், மாசேயா, மின்யமின், மீக்காயா, எலியோனாய், செக்கரியா, அனனியா ஆகியோர் எக்காளம் தாங்கி இருந்தனர்.42 மாசேயா, செமாயா, எலயாசர், உசீ, யோகனான், மல்கியா, ஏலாம், ஆசேர் ஆகியோரும் நின்றனர். பாடகர்களும், அவர்களின் தலைவர் இஸ்ரகியாவும், உரக்கப் பாடினார்கள்.⒫43 அன்று அவர்கள் மிகுதியாகப் பலி செலுத்தி மகிழ்ந்தனர். ஏனெனில், கடவுள் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பினார். அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். எருசலேமின் ஆரவாரம் வெகுதூரம்வரை கேட்டது.44 கருவூலம், படையல்கள், முதற்கனி, பத்திலொரு பகுதி ஆகியவைகளுக்கான அறைகளின் பொறுப்பாளர்களையும், திருச்சட்டத்தின்படி, குருக்களுக்கும் லேவியருக்கும் உரிய பகுதிகளை நகர்களின் வயல்களில் தண்டல் செய்யும் ஆள்களையும் அன்று நியமித்தார்கள். ஏனெனில் அங்கே பணிபுரிந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மகிழ்ச்சி கொண்டது.45 தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி, இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும், தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர்.46 ஏனெனில், தாவீது, ஆசாபு ஆகியோரின் பழங்காலத்திலிருந்தே பாடகர் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடவுளுக்குரிய புகழ்ப் பாடல்களும் நன்றிப் பாடல்களும் இருந்தன.47 மேலும் செருபாபேலின் நாள்களிலிருந்தும் நெகேமியாவின் நாள்களிலிருந்தும், இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகர்களுக்கும், வாயிற்காப்போருக்கும் உரிய பகுதிகளை நாள்தோறும் கொடுத்து வந்தனர். அவர்கள் லேவியர்க்கு உரியதைப் பிரித்து வைத்தனர். லேவியர் ஆரோனின் மக்களுக்கு உரியதைப் பிரித்து வைத்தனர்.Nehemiah 12 ERV IRV TRV