வணங்கா கழுத்துள்ள ஆண்களே
ஆகா ஆண்களே அந்த
பழத்துக்காக பாவிகளாக ஆனீங்களே
மனைவியோடு பழத்தை தின்று
பாவம் செய்த ஆதாமே
நாங்க பரிதாபமாகவே ஆனோமே
– வணங்கா
ஆத்திரப்பட்டு ஆபேலை
கொன்ற காயினே அந்த
ஆபேலின் இரத்தம் அங்கே போவானேன்
– வணங்கா
இச்சையோடு பெத்சபாளை
பார்த்தானே (மாம்ச) அந்த
தாவீதும் படுகுழியில் விழுந்தானே
– வணங்கா
யாக்கோபின் மகளான தீனாளே உன்
அழகு மேலே ஆசை வைத்தான் சீகேமே
– வணங்கா
யூதாவின் மருமகளே தாமாரே
மாமனின் இச்சைக்கு பலியான மருமகளே
– வணங்கா
தங்கை என்றும் தாமாரை பாராமல் அந்த
அம்மானும் ஆசைப்பட்டு அழிந்தானே
– வணங்கா
தெலியாளை தெரியுமா சிம்சோனே உன்
அபிஷேகம் எல்லாமே என்னாச்சு
– வணங்கா
Vanangaa Kaluththulla Aannkalae Chords for Keyboard, Guitar and Piano