Kaalam Ini Sellaathu in B Scale

காலம் இனி செல்லாது
ஒரு காசு கூட வராது
வெறும் பட்டம் அங்கே செல்லாது
உன் சட்டம் அங்கே நில்லாது
வெளி வேஷம் அங்கே செல்லாது
வெல்லாது செல்லாது செல்லாது
மாடி மேலே மாடி கட்டும்
மைடியர் மிஸ்டர்
மறுமையிலே வீடு உண்டா
சொல்லுங்க மிஸ்டர்
ஒடி ஒடி சொத்து சேர்க்கும்
மைடியர் மிஸ்டர்
சொத்து உண்டா பரலோத்தில்
சொல்லுங்க மிஸ்டர்
புரிஞ்சுக்கோ நல்லா தெரிஞ்சுடகோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ
புரிஞ்சுக்கோ நல்லா தெரிஞ்சுகோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ
நகையின் மேலே நகையை
பூட்ட விரும்பிடும் சிஸ்டர்
நாளை நகை உடன் வராது
தெரியுமா சிஸ்டர்
மினு மினுக்காய் உடலை போற்றும்
மைடியர் மிஸ்டர்
அது மண்ணுக்குள்ளே மங்கிப்போகும்
தெரிஞ்சுக்கோ சிஸ்டர்
— புரிஞ்சுக்கோ
வாங்கி விற்று பணத்தை
சேர்க்கும் மைடியர் மிஸ்டர்
666 வரும் தெரியுமா மிஸ்டர்
பணத்தை பேங்கில் சேர்த்து
வைக்கும் மைடியர் மிஸ்டர் – அதை
அந்திக் கிறிஸ்து அள்ளிக் கொள்வான்
தெரிஞ்சுக்கோ மிஸ்டர்
— புரிஞ்சுக்கோ


Kaalam Ini Sellaathu Chords for Keyboard, Guitar and Piano

Kaalam Ini Sellaathu Chords in B Scale

தமிழ்