En Uyirae in F♯ Scale

என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒரு நாளும் மறவாதே ஒரு போதும் மறவாதே
குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார் (நடத்துகிறார்)
கழுகு போல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே
எப்போதும் கடிந்து கொள்பவரல்ல
என்றென்றும் கோபம் கொள்பவரல்
பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை


En Uyirae Chords for Keyboard, Guitar and Piano

En Uyirae Chords in F♯ Scale

தமிழ்