Uththamamaay Mun Sella in D Scale

உத்தமமாய் முன் செல்ல
உதவி செய்யும் யேகோவா
ஊக்கமதை கைவிடாமல்
காத்துக் கொள்ள உதவும்
ஊக்கமதை கைவிடாமல்
காத்துக் கொள்ள உதவும்
—உத்தமமாய்
பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள்
எல்லா நேரத்தில் தாக்கும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள்
எல்லா நேரத்தில் தாக்கும்
—உத்தமமாய்
தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க
வழி வகுத்தருள வேண்டும்
நேர்மையாக வாக்கைக் காக்க
வழி வகுத்தருள வேண்டும்
—உத்தமமாய்
தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே
கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே
—உத்தமமாய்


Uththamamaay Mun Sella Chords for Keyboard, Guitar and Piano

Uththamamaay Mun Sella Chords in D Scale

தமிழ்