சுந்தரப் பரம தேவ மைந்தன்
இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்
புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும்!
அந்தரம் புவியில் தந்து
சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் நம்மை ஒன்றாய்
கூட்டினார்-அருள் முடி சூட்டினார்
கிருபையால் தேற்றினாரே துதி
–சுந்தரப் பரம
பாதகப் பிசாசால் வந்த
தீதெனும் பாவத்தால் நொந்த-
பாவிகளான நம்மை உலாவி மீட்டாரே-
வேத பிதாவுக் குகந்த ஜாதியாக கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசுவாச வீட்டாரே
கோதணுகா நீதிபரன்
பாதமதின் ஆதரவில் கூடுங்கள்
பாவத்துயர் போடுங்கள்
ஜெயத்தைக் கொண்டாடுங்கள்-துதி
சொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்
–சுந்தரப் பரம
விண்ணிலுள்ள ஜோதிகளும்
எண்ணடங்கா சேனைகளும்
விந்தையாய் கிறிஸ்துவைப் பணிந்து
போற்றவே-மண்ணிலுள்ள ஜாதிகளும்
நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
அண்ணலாம் பிதாவுக்கொரே
புண்ணிய குமாரனைக் கொண்டாடிட
அவர் பாதம் தேடிட வெகு திரள் கூடிட
துதி புகழ் பாடிடப் பாடிட என்றும்
–சுந்தரப் பரம
சத்தியத் தலைவர்களும்
வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர்களும் கிருபை தங்கி வாழ்வே-
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ்சமாதான மாக வாழவே
உத்தம போதகர்களும்
சத்திய திருச்சபைகளும்-உயர்ந்து
வாழ தீயோன் பயந்து தாழ மிக நயந்து
கிறிஸ்துவுக்கு ஜெயந்தான்
நயந்தான் என்றும்
–சுந்தரப் பரம
Suntharap Parama Thaeva Mainthan Chords for Keyboard, Guitar and Piano