Paralokamae En Sonthamae in G♯ Scale

பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
நான் என்று காண்பேனோ
வருத்தம் பசி தாகம் மனத்துயரம்
அங்கே இல்லை – விண் கிரீடம்
வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்
…பரலோகமே என்
சிலுவையில் அறையுண்டேன்
இனி நானல்ல இயேசுவே-அவரின்
மகிமையே எனது இலட்சியமே
…பரலோகமே என்
இயேசு என் நம்பிக்கையாம்
இந்த பூகியும் சொந்தமல்ல – பரிசுத்த
சிந்தையுடன் இயேசுவை பின்பற்றுவேன்
…பரலோகமே என்
ஓட்டத்தை ஜெயமுடன் நானும்
ஓடிட அருள் செய்வார்-விசுவாச
பாதையில் சேராது ஓடிடுவேன்
…பரலோகமே என்
பரம சுகம் காண்பேன்
பரன் தேசம் அதில் சேர்வேன்-ராப்பகல்
இல்லையே இரட்சகர் வெளிச்சமே
…பரலோகமே என்
அழைப்பின் சத்தம் கேட்டு நானும்
ஆயத்தமாகிடுவேன்- நாட்களும்
நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே
…பரலோகமே என்
பளிங்கு நதியோரம் சுத்தர்
தாகம் தீர்த்திடுவார்-தூதர்கள்
பாடிட தூயனை தரிசிப்பேன்
…பரலோகமே என்


Paralokamae En Sonthamae Chords for Keyboard, Guitar and Piano

Paralokamae En Sonthamae Chords in G♯ Scale

தமிழ்