நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளிபிரகாசா
துதி பாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா
–நிகரே இல்லாத
துங்கன் இயேசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனை தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்
–நிகரே இல்லாத
கல்லும் மண்ணும் என் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம்
–நிகரே இல்லாத
பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே
–நிகரே இல்லாத
தேவ மைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கிடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
–நிகரே இல்லாத
கொந்தளித்திடும் அலைகளையும்
கால் மிதித்திடும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதட்டிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே
–நிகரே இல்லாத
ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மா சந்தோஷ நாள் நெருங்கிடுதே
–நிகரே இல்லாத
Nikarae Illaatha Sarvaesaa Chords for Keyboard, Guitar and Piano