Mutiyaathu Mutiyaathu in C♯ Scale

முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது (இயேசையா) – என்னால்
முடியாது முடியாது
திராட்சைச் செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன்
….முடியாது
மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே
….முடியாது
குயவன் நீர் களிமண் நான்
உமது விருப்பம் போல் வனைந்து கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்
….முடியாது
பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
எதையும் செய்திட பெலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையா, உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்


Mutiyaathu Mutiyaathu Chords for Keyboard, Guitar and Piano

Mutiyaathu Mutiyaathu Chords in C♯ Scale

தமிழ்