Ennnniladangaa Sthoththiram Chords

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்
தேவா என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர்செய்த நன்மைக்கே- ஆஹா
வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியின் காண்கின்ற யாவும்
கர்த்தர் உமைப் போற்றுமே
—எண்ணிலடங்கா
காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுமே
–எண்ணிலடங்கா
நீரினில் வாழ்கின்ற யாவும்
இந்நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உமைப் போற்றுமே
—-எண்ணிலடங்கா
வால வயதுள்ளோனோரும்
மிகும் வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே
—எண்ணிலடங்கா


Ennnniladangaa Sthoththiram Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்