யோபு 36
1 பின்னும் எலிகூ:
2 நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.
3 நான் தூரத்திலிருந்து ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.
4 மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
5 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
6 அவர் துன்மார்க்கமாய் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
7 அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடேகூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.
8 அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
9 அவர், அவர்கள் கிரியையையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
10 அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.
11 அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
12 அடங்கார்களாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.
13 மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
14 அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்.
15 சிறுமைப்பட்டர்வகளை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.
16 அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
17 ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.
18 உக்கிரமுண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் வாரிக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும்பொருளை மிகுதியாய்க் கொடுத்தாலும் அதற்கு நீர் நீங்கலாகமாட்டீர்.
19 உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரணபராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
20 ஜனங்கள் தங்கள் இடத்தைவிட்டு வாரிக்கொள்ளப்படப்போகிற இரவை வாஞ்சிக்காதிரும்.
21 அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும், உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
22 இதோ தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப்போல் போதிக்கிறவர் யார்?
23 அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
24 மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியை நீர் மகிமைப்படுத்த நினையும்.
25 எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.
26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
27 அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
28 அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.
29 மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
30 இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை வߠΰிக்கிறார்; சமρத்திரத்தின் ஆδங்களையும் மூடுகிறார்.
31 அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.
32 அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை, அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
33 அதினால் அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.
Tamil Indian Revised Version
மேலும் கீலேயாத் துவங்கி, அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், அம்மோனியர்களுடைய கடைசி எல்லையாகிய யாபோக்கு ஆறுவரை இருக்கிற தேசத்தையும்,
Tamil Easy Reading Version
மேலும் கீலேயாத்திலிருந்து துவங்கும் நிலப்பகுதியை ரூபன் கோத்திரத்திற்கும், காத் கோத்திரத்திற்கும் கொடுத்தேன். இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து யாப்போக் நதிவரைக்கும் உள்ளது. பள்ளத்தாக்கின் நடுப்பகுதி ஒரு எல்லை. யாப்போக் நதி அம்மோனிய ஜனங்களின் எல்லை.
Thiru Viviliam
அர்னோன் ஓடைவரை உள்ள கிலயாதின் பகுதியையும், அர்னோன் நடு ஓடையும் அதன் எல்லைப்புற நாடும் தொடங்கி, அம்மோனியரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுவரைக்கும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் கொடுத்தேன்.
King James Version (KJV)
And unto the Reubenites and unto the Gadites I gave from Gilead even unto the river Arnon half the valley, and the border even unto the river Jabbok, which is the border of the children of Ammon;
American Standard Version (ASV)
And unto the Reubenites and unto the Gadites I gave from Gilead even unto the valley of the Arnon, the middle of the valley, and the border `thereof’, even unto the river Jabbok, which is the border of the children of Ammon;
Bible in Basic English (BBE)
And the land from Gilead to the valley of the Arnon, with the middle of the valley as a limit, as far as the river Jabbok which is the limit of the country of the children of Ammon, I gave to the Reubenites and the Gadites;
Darby English Bible (DBY)
And to the Reubenites and to the Gadites I gave from Gilead even to the river Arnon, the middle of the ravine and its border, as far as the river Jabbok, the border of the children of Ammon;
Webster’s Bible (WBT)
And to the Reubenites and to the Gadites I gave from Gilead even to the river Arnon half the valley, and the border even to the river Jabbok, which is the border of the children of Ammon:
World English Bible (WEB)
To the Reubenites and to the Gadites I gave from Gilead even to the valley of the Arnon, the middle of the valley, and the border [of it], even to the river Jabbok, which is the border of the children of Ammon;
Young’s Literal Translation (YLT)
`And to the Reubenite and to the Gadite I have given from Gilead even unto the brook Arnon, the middle of the valley and the border, even unto Jabbok the brook, the border of the sons of Ammon,
உபாகமம் Deuteronomy 3:16
மேலும் கீலேயாத் தொடங்கி அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யோபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும்,
And unto the Reubenites and unto the Gadites I gave from Gilead even unto the river Arnon half the valley, and the border even unto the river Jabbok, which is the border of the children of Ammon;
And unto the Reubenites | וְלָרֽאוּבֵנִ֨י | wĕlorʾûbēnî | veh-lore-oo-vay-NEE |
and unto the Gadites | וְלַגָּדִ֜י | wĕlaggādî | veh-la-ɡa-DEE |
gave I | נָתַ֤תִּי | nātattî | na-TA-tee |
from | מִן | min | meen |
Gilead | הַגִּלְעָד֙ | haggilʿād | ha-ɡeel-AD |
even unto | וְעַד | wĕʿad | veh-AD |
river the | נַ֣חַל | naḥal | NA-hahl |
Arnon | אַרְנֹ֔ן | ʾarnōn | ar-NONE |
half | תּ֥וֹךְ | tôk | toke |
valley, the | הַנַּ֖חַל | hannaḥal | ha-NA-hahl |
and the border | וּגְבֻ֑ל | ûgĕbul | oo-ɡeh-VOOL |
unto even | וְעַד֙ | wĕʿad | veh-AD |
the river | יַבֹּ֣ק | yabbōq | ya-BOKE |
Jabbok, | הַנַּ֔חַל | hannaḥal | ha-NA-hahl |
border the is which | גְּב֖וּל | gĕbûl | ɡeh-VOOL |
of the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
of Ammon; | עַמּֽוֹן׃ | ʿammôn | ah-mone |