Job 4 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 அதன்பின் தேமானியன் எலிப்பாக பேசத் தொடங்கினான்:2 ⁽“ஒன்று சொன்னால்␢ உமக்குப் பொறுக்குமோ?␢ சொல்லாமல் நிறுத்த யாரால்தான் முடியும்?⁾3 ⁽பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்!␢ தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்!⁾4 ⁽உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத்␢ தாங்கியுள்ளன; தள்ளாடும்␢ கால்களை உறுதியாக்கியுள்ளன.⁾5 ⁽ஆனால் இப்பொழுதோ,␢ ஒன்று உமக்கு வந்துற்றதும்␢ வருந்துகின்றீர்; அது உம்மைத்␢ தாக்கியதும் கலங்குகின்றீர்.⁾6 ⁽இறையச்சம் அல்லவா உமது உறுதி?␢ நம்பிக்கையல்லவா உமது நேரிய வழி?⁾7 ⁽நினைத்துப்பாரும்! குற்றமற்றவர்␢ எவராவது அழிந்ததுண்டா?␢ நேர்மையானவர் எங்கேயாவது ஒழிந்ததுண்டா?⁾8 ⁽நான் பார்த்த அளவில், தீவினையை உழுது,␢ தீங்கினை விதைத்தவர்␢ அறுப்பது அதையே!⁾9 ⁽கடவுளின் மூச்சினால் அவர்கள் அழிவர்;␢ அவரின் கோபக் கனலால் எரிந்தொழிவர்.⁾10 ⁽அரியின் முழக்கமும்␢ கொடுஞ்சிங்கத்தின் உறுமலும் அடங்கும்;␢ குருளையின் பற்களும் உடைபடும்.⁾11 ⁽இறந்துபோம் சிங்கம் இரையில்லாமல்;␢ குலைந்துபோம்␢ பெண்சிங்கத்தின் குட்டிகள்.⁾12 ⁽எனக்கொரு வார்த்தை␢ மறைவாய் வந்தது;␢ அதன் மெல்லிய ஓசை␢ என் செவிக்கு எட்டியது.⁾13 ⁽ஆழ்ந்த உறக்கம் மனிதர்க்கு வருகையில்,␢ இரவுக் காட்சியின் சிந்தனைகளில்,⁾14 ⁽அச்சமும் நடுக்கமும் எனை ஆட்கொள்ள,␢ என் எலும்புகள் பலவும் நெக்குவிட்டனவே.⁾15 ⁽ஆவி ஒன்று என் முன்னே கடந்து சென்றது;␢ என் உடலின் மயிர் சிலிர்த்து நின்றது.⁾16 ⁽ஆவி நின்றது; ஆனால்,␢ அதன் தோற்றம் எனக்குத் தெளிவில்லை;␢ உருவொன்று என் கண்முன் நின்றது;␢ அமைதி நிலவிற்று; குரலொன்றைக் கேட்டேன்.⁾17 ⁽கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா?␢ படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?⁾18 ⁽அவர் தம் தொண்டர்களிலே␢ நம்பிக்கை வைக்கவில்லையெனில்,␢ அவருடைய வான தூதரிடமே␢ அவர் குறைகாண்கின்றாரெனில்,⁾19 ⁽புழுதியைக் கால்கோளாகக்கொண்டு,␢ மண் குடிசையில் வாழ்ந்து,␢ அந்துப்பூச்சிபோல் விரைவில் அழியும்␢ மனிதர் எம்மாத்திரம்?⁾20 ⁽காலைமுதல் மாலைவரையில்␢ அவர்கள் ஒழிக்கப்டுவர்; ஈவு இன்றி␢ என்றென்றும் அழிக்கப்படுவர்.⁾21 ⁽அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட,␢ அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?⁾